ஜோகூர் பாரு, ஜூலை.13-
நேற்று இரவு ஜோகூர் பாரு, ஜாலான் பஸார் காராட் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு 10:49 மணியளவில் ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறைக்கு அழைப்பு வந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒரு யமாஹா மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டாலும், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடலில் விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் பணி 30 மீட்டர் சுற்றளவில் நடைபெற்றது. ஆனால் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








