பஃபர் மீன் எனப்படும் ஊது மீனை உண்டப்பின்னர் தங்களின் தாயாரும், தந்தையும் மரணமடைந்த சம்பவம் குறித்து, அரசாங்கம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்துள்ள வேளையில், அதில் சம்பந்தப்பட்டுள்ள மீன் விற்பனையாளர் இன்னும் சுதந்திரமாக மீன்களை விற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது பெறும் ஏமாற்றத்தை அளிப்பதாக பெற்றோரை இழந்துள்ள 51 வயது மாது ங ஐ லீ வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்த மீன் விற்பனையாளர் மீது குளுவாங் மாவட்ட சுகாதார அலுவலகத்திடமும், மலேசிய சுகாதார அமைச்சகத்திடமும் புகார் அளித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்நபர் இன்னும் முகநூல் பக்கத்தில் மின்களை விற்பனை செய்துக்கொண்டிருப்பது நியாயமற்றது என்று ங ஐ லீ விவரித்தார்.
இந்த நச்சு மீனை விநியோகித்த தரப்பினருக்கு எதிராக 1972 ஆம் ஆண்டு மலேசிய மீன் வளத்துறை மேம்பாட்டு வாரிய சட்டம் மற்றும் 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமது பெற்றோரை இழந்துள்ள ஜொகூர் , ஸ்கூடாய், கம்போங் சாமேக்கைச் சேர்ந்த ங ஐ லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


