Dec 4, 2025
Thisaigal NewsYouTube
80 கிலோகிராம் எடை கொண்ட மலைப்பாம்பு வீட்டின் கூரையிலிருந்து விழுந்தது
தற்போதைய செய்திகள்

80 கிலோகிராம் எடை கொண்ட மலைப்பாம்பு வீட்டின் கூரையிலிருந்து விழுந்தது

Share:

குவாந்தான், ஆகஸ்ட்.28-

குவாந்தான், கம்போங் கெம்பாடானில் உள்ள வீடு ஒன்றில், சுமார் 80 கிலோகிராம் எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று கூரையிலிருந்து விழுந்து குடியிருப்பாளரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று காலை 11.53 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பு பெற்ற பின்னர் 10 வீரர்களும், இரண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குவாந்தான் மாவட்ட மலேசிய பொது தற்காப்புப் படை அதிகாரி மேஜர் ஸாஹிட் ஸைனுடின் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்கு முன் வீட்டில் சத்தம் கேட்டதாகவும், அச்சமயத்தில் தமது மகளின் அறையின் கூரை இடிந்து விழுந்திருப்பது கண்டறியப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் மஸ்லான் ஸாகாரியா கூறினார்.

இரண்டாவது முறை மீண்டும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது, கூரையின் மரச்சட்டத்திலிருந்து படுக்கை மீது 10 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு விழுந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, தாம் உடனடியாக 999, அவசர எண்ணிற்குத் தொடர்புக் கொண்டதாகவும் மஸ்லான் தெரிவித்தார்.

அந்த மலைப்பாம்பின் அளவு பெரிதாகவும் நீளமாகவும் இருந்ததால், அதை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டதாக ஸாஹிட் ஸைனுடின் கூறினார். தொடர் நடவடிக்கைக்காக, அந்த மலைப்பாம்பு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News