Sep 29, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் அகதிகள் பிரச்சினைக்கு சட்டப்படி தீர்வு காணப்படும் – சைஃபுடின்
தற்போதைய செய்திகள்

மியன்மார் அகதிகள் பிரச்சினைக்கு சட்டப்படி தீர்வு காணப்படும் – சைஃபுடின்

Share:

மியன்மார் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையை இனியும் தொடரவிடாமல், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் படிப்படியாகவும் முறையாகவும் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மியன்மாரைச் சேர்ந்த 5,000 அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு தன்னார்வ அடிப்படையில் படிப்படியாகத் திருப்பி அனுப்பும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் முதல் கட்டமாக, மியான்மர் அரசாங்கம் அதிகாரப்பூர்வ தூதரகக் குறிப்பின் மூலம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில், இன்று 1,476 பேர் சொந்த நாட்டுக்குத் திரும்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கை உள்துறை அமைச்சு, மலேசியக் குடிநுழைவுத் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்படுவதாக சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் வெளிநாட்டு அகதிகள் பிரச்சினை நாட்டுக்கு பெரும் நிதிச்சுமையையும் சமூகப் பிரச்சினைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இரு நாடுகளை உள்ளடக்கிய பிரச்சினைக்கு அமலாக்க நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், ஆவணப்படுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நாடு திரும்பும் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள சொந்த நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சைஃபுடின் குறிப்பிட்டார்.

Related News