Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மூன்று தரை வீடுகள் தீயில் சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று தரை வீடுகள் தீயில் சேதம்

செபராங் பிறை, ஜூன்.24-

பினாங்கு, தாமான் தாசேக் குளுகோர் உத்தாமாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தரை வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. எனினும் அதிர்ஷ்டவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து குறித்து அதிகாலை 4.52 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது அந்த மூன்று வீடுகளிலும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும், இதில் ஐந்து கார்களும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்க முழு வீச்சில் அணைக்கப்பட்டது. தீ ஏற்பட்டதற்கானக் காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக ஜோன் சகூன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →