Oct 6, 2026
Thisaigal NewsYouTube

பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

பள்ளியின் நற்பெயர் மற்றும் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பள்ளிகளில் நடைபெறும் பகடிவதை துன்புறுத்தல் சம்பவங்களை மறைக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் ஆளாகும் நிலையில், பள்ளியின் நற்பெயருக்காக பிரச்சினைகளை மறைப்பது அவர்களின் நலனைப் பாதிக்கும் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் பாதுகாப்பு தொடர்பான எந்தப் பிரச்சினையும் உடனடியாக போலீஸ் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்ற போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயிலின் கருத்தையும் அன்வார் ஆதரித்தார்.

பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் மாணவர்களைத் துன்புறுத்தல் மற்றும் கொடுமையிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற அவர், இது போன்ற சம்பவங்களை கையாள்வதில் ஆரம்ப நிலையிலேயே காணப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இதற்கிடையில், 16 வயது மாணவி ஐரின் சோஃபியா கைருல் ஃபைசால், பள்ளி மண்டபத்தில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 16 வயது மாணவன் ஒருவன் அக்டோபர் 9ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ –  அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ – அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்