Dec 19, 2025
Thisaigal NewsYouTube
கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.19-

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, வரும் டிசம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், வாகனமோட்டிகள், டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடியினைப் பெறுவார்கள் என பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

இந்த தள்ளுபடியானது, கிளாஸ் 1தனியார் வாகனங்கள் மற்றும் கிளாஸ் 2 தனியார் வாகனங்களுக்குப் பொருந்தும் என்றும், பினாங்கு பாலம் மற்றும் நாட்டின் அனைத்து டோல் சாவடிகளிலும் இது அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், நாட்டின் நுழைவாயில் டோல் சாவடிகள், அதாவது சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடிகள் இத்தள்ளுபடிக்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மலேசியர்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றும் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

Related News