Mar 27, 2026
Thisaigal NewsYouTube
சொந்த வாகனத்திலேயே மோதப்பட்டு ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

சொந்த வாகனத்திலேயே மோதப்பட்டு ஆடவர் பலி

Share:

சிக் ,ஆகஸ்ட் 28

நிறுத்தப்பட்டிருந்த தனது four-wheel drive வாகனம், திடீரென்று பின்புறமாக நகர்ந்ததில் அந்த வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் கெடா, சிக், ஜெனெரி, கம்போங் பாசிர் புடிஹ்- வில் நிகழ்ந்தது. இதில் லிம் கோக் ஹாங் என்று அடையாளம் கூறப்பட்ட 59 வயது நபர், கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் உஸ்மான் தெரிவித்தார்.

தனது தோட்டத்து கொல்லையில் வேலைகளை முடித்து விட்டு, four-wheel drive வாகனத்தை, தோட்டத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு, கேட்டை மூடுவதற்கு முற்பட்ட வேளையில் முழு அழுத்தமின்றி செயலில் இருந்த Hand break-கின் பிடிமானம், தளர்ந்ததைத் தொடர்ந்து அந்த அந்த பார வண்டி, பின்னோக்கி நகர்ந்ததில் அந்த நபரை மோதித் தள்ளியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அப்துல் ரசாக் தெரிவித்தார்.

Yan-னில் உள்ள தனது வீட்டிற்கு புறப்படுவதற்காக அந்த நபர் தயாரான போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவப்பரிசோதனைக்கான அந்த நபரின் உடல்,சிக் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்துல் ரசாக் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு