ஜோகூர் பாரு, ஜூலை.26-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவைச் சேர்ந்த 6 வயது இந்திய சிறுவன் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் காணாதது குறித்து தெரிய வந்த அந்த சிறுவனின் 36 வயது தந்தை முனுசாமி நேற்று முன்தினம் காலை 2.15 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளார் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
காணாமல் போன சிறுவன் எம். திஷாண்ட் என்றும், உயரம் 110 சென்டிமீட்டர் என்றும் எடை 19 கிலோ என்றும் அடையாளம் கூறப்பட்டதாக ஏசிபி குமரேசன் குறிப்பிட்டார்.
சிறுவனை ஆகக் கடைசியாகப் பார்த்தது, இஸ்கண்டார் புத்ரி, புக்கிட் இண்டா- கோப்பிதியாம் தியோங் நாம் உணவகமாகும். சிறுவனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் புலன் விசாரணை அதிகாரி E. கோமதி 010-3812804 அல்லது 07- 5113622 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை ஏசிபி குமரேசன் கேட்டுக் கொண்டார்.








