அலோர் ஸ்டார், அக்டோபர்.16-
கெடா, பாலிங் மாவட்டத்தில் ஒரு இடைநிலைப்பள்ளியில் நான்கு இளையோர்களும், ஒரு மாணவியும் சம்பந்தப்பட்ட பாலியல் நடவடிக்கை ஒரு கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக, வயது குறைந்த பெண்ணிடம் தகாத உறவு கொள்ளப்பட்ட சம்பவமாகும் என்று மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பள்ளி வகுப்பறை, செம்பனைத் தோட்டம் என பல இடங்களில் இந்த பாலியல் உறவு நடந்துள்ளன.
இது ஒரு கும்பலாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் நடவடிக்கை அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவியுடன் நான்கு இளையோர்கள் வெவ்வேறு தருணங்களில் உறவு கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸில் அபு ஷா தெரிவித்தார்.