Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம் தேர்வு திட்ட​மிட்டப்படி நடைபெறும்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம் தேர்வு திட்ட​மிட்டப்படி நடைபெறும்

Share:

வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆகக் கடைசியான மாநிலமாக ஜோகூர் வகைப்படுத்தப்பட்ட போதிலும் வரும் திங்கட்கிழமை தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறுவதற்கு அட்டவனையிடப்பட்டுள்ள எஸ்.பி.எம் தேர்வு, திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் அறி​வித்துள்ளார்.

எஸ்.பி.எம் தேர்வு, திட்டமிட்ட தேதிகளின்படி நடைபெறும். அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று புத்ராஜெயாவில் கிழக்குகரையோர மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிகேஆர் மகளிர் அணியின் நிவாரண உதவிகளை வழங்கும் திட்த்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள், வெள்ளத்தில் சிக்கி, தேர்வு மையங்களுக்கு வர முடியாமல் போகும் சம்பவங்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் ஏற்படும் காலங்களி​ல் எஸ்.பி.எம் தேர்வு நடைபெறுவது வழக்கமாகி விட்டதால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகளை செய்வதை தாங்கள் வழக்கமாக்கிக்கொண்டதாக அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்