Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

Share:

குவாந்தான், மே,27-

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஷா லோக்மான் லுட்ஸா ரம்லியும், அவரது மனைவி நூருல்ஃபிஸா அர்டியானா அம்பாவும் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.

பகாங் மாநிலம் பெக்கான் அருகே ஜாலான் குவாந்தான்-செகாமாட் சாலையின் 76-ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் ஷா லோக்மான் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, காயமடைந்த அவர்களின் நான்கு குழந்தைகள் தற்போது ரொம்பினில் உள்ள முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த தம்பதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News