Oct 1, 2026
Thisaigal NewsYouTube

பூனையை வன்புணர்வு செய்த ஆடவருக்கு 40,000 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பூனையை வன்புணர்வு செய்த ஆடவருக்கு 40,000 ரிங்கிட் அபராதம்

ஷா ஆலாம், டிசம்பர்.11-

பூனையை வன்புணர்வு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நேபாள ஆடவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 40 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 15 மாதச் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அர்மான் ஷா என்ற அந்த 43 வயது ஆடவர், நீதிபதி நோர் ஹாஸ்னியா அப்துல் முன்னிலையில், பூனையை வதை செய்த குற்றச்சாட்டில் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

முன்னாள் பாதுகாவலரான அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோத்தா கெமுனிங்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விலங்குகள் நலச் சட்டம் 2015, பிரிவு 29(1)(a)-ன் கீழ், இவ்வழக்கானது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பொது இடத்தில் அரை நிர்வாணமாக இருந்தது, முறையான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அர்மான் ஷா ஏற்கனவே கடந்த 4 மாதங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →