Dec 14, 2025
Thisaigal NewsYouTube
அச்சுறுத்தல்: துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியவர் மேலும் 4 நாட்களுக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தல்: துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியவர் மேலும் 4 நாட்களுக்குத் தடுப்புக் காவல்

Share:

சுங்கை பட்டாணி, டிசம்பர்.14-

கெடா, பண்டார் லகுனா மெர்போக் பகுதியில் அண்டை வீட்டுக்காரரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், எதிர்வரும் வியாழக்கிழமை வரை மேலும் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுங்கை பட்டாணி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் ஷாய்ஃபுல் அக்மால் முகமட் ராஸி இந்த இரண்டாவது தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கினார்.

அந்த நபர், கடந்த வாரம் அண்டை வீட்டுக்காரரை நோக்கி துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி மிரட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து காவற்படை அவரைக் கைது செய்தது. சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், துப்பாக்கியைப் போன்ற ஒரு பொருளும், சில போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட காவற்படைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார். இந்த வழக்கு, 1971 இன் துப்பாக்கிச் சட்டத்தின் பிரிவு 8இன் கீழும், 1960 ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8(a)-ன் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News