லாபுவானில் நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒன்பது திட்டங்கள் நிறைவு பெற்று, இவ்வாண்டு ஜனவரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், லாபுவானில் மொத்தம் 19 நீர் விநியோகத் திட்டங்களுக்கு 640 மில்லியன் ரிங்கிட்டுக்கு அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது.
லாபுவானுக்கான சுத்திகரிக்கப்பட்ட நீரில் 90 விழுக்காடு சபாவிலிருந்து கிடைப்பதால், நீர் விநியோகத் தடைகள் மக்களையும் வர்த்தகங்களையும் பாதிப்பதாக அவர் கூறினார்.
மேலும், நிரந்தர முதியோர் செயல்பாட்டு மையம் அமைக்க 3 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படுவதுடன், ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 437 மாணவர்களுக்குப் போக்குவரத்து உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








