Oct 31, 2026
Thisaigal NewsYouTube

ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

ஏழை மக்களுக்கு உதவுவதால் எந்தவோர் அரசும் வறுமையடையவோ திவாலாகவோ ஆகாது; மாறாக, தலைமைத்துவத்தின் தவறான செயல்பாடுகள், ஊழல் மற்றும் நிதி கசிவுகளால்தான் நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு அடிப்படை ரஹ்மா உதவித் திட்டமான சாரா, ரஹ்மா பண உதவித் திட்டமான எஸ்டிஆர் ஆகியவற்றுக்காக 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற 'ஸ்கிம் உசஹாவான் பங்கிட்' தொழில்முனைவோர் திட்டத் தொடக்க விழாவில் பேசிய அன்வார், பொதுச் செல்வம், குறிப்பிட்ட சிலரின் நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும்போதும், நிர்வாகத்தில் ஊழலும் பேராசையும் தலைதூக்கும்போதும்தான் நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றார்.

எனவே, நிதி நிர்வாகமும் நல்லாட்சியும் முறையாகப் பேணப்படும் வரை, உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கையை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →