சரவாக், பிந்துலு கிடுரோங் பகுதியில் உள்ள ஸ்ரீ பெர்த்திவி குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான 51 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிந்துலு நியூஸ் பேஜ் 2 என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியில், குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியிருப்பது பதிவாகியுள்ளது.
இது குறித்து சரவாக் மாநில பொறுப்பு போலீஸ் ஆணையர் துணை ஆணையர் சைஃபுல்லிஸான் இஷாக் கூறுகையில், இதுவரை போலீசாருக்கு இச்சம்பவம் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இருப்பினும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.








