Nov 4, 2026
Thisaigal NewsYouTube

இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாடு தழுவிய பாதுகாப்புச் சோதனைகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாடு தழுவிய பாதுகாப்புச் சோதனைகள்

இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாட்டின் தயார் நிலையை மதிப்பிடுவதற்காக பல்வேறு துறைகளில் பாதுகாப்பு அழுத்தச் சோதனைகள் நடத்தப்படும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை நாடு முழுவதும் உள்ள கைப்பேசிகளுக்கு நேரடியாக அனுப்பக்கூடிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு முறையை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலில் உள்ளூர் பேரிடர்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட இந்த முறை, நாடு தழுவிய தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தப்படலாம் என்றார்.

தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு கட்டமைப்புகளின் இணையப் பாதுகாப்பையும் அமைச்சு மதிப்பீடு செய்யும். இதில் ஆர்டிஎம் மற்றும் பெர்னாமா நிறுவனங்களின் வலையமைப்புகளும் அடங்கும்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு மன்றம், பேங்க் நெகாரா, சைபர் பாதுகாப்பு முகமை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையத் தாக்குதல்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் உள்ளிட்ட கலப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டின் தயார் நிலையை ஆய்வு செய்து வருகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →