Nov 4, 2026
Thisaigal NewsYouTube

கெடாவில் 7 மோசடிக் கும்பல்கள் முறியடிப்பு! 87 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடாவில் 7 மோசடிக் கும்பல்கள் முறியடிப்பு! 87 பேர் கைது

கெடா மாநிலத்தில் தொலைபேசி மற்றும் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஏழு கும்பல்களைப் போலீசார் முறியடித்து, 87 பேரைக் கைது செய்துள்ளனர்.

கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா இதனைத் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மலேசியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 75 ஆண்களும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கி மோசடி, காதல் மோசடி, போலி வேலை வாய்ப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் கணினிகள், கைப்பேசிகள், வங்கி அட்டைகள் உள்ளிட்ட 3 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்கள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக 997 என்ற தேசிய மோசடி அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →