நாளை நவம்பர் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மலேசியாவில் ரோன் 97, மானியமில்லா ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுகின்றன.
இதன்படி, ரோன் 97 பெட்ரோல் லிட்டருக்கு 20 சென் குறைந்து 4 ரிங்கிட் 70 சென்னுக்கும், மானியமில்லா ரோன் 95 பெட்ரோல் 15 சென் குறைந்து 4 ரிங்கிட் 27 சென்னுக்கும் விற்பனை செய்யப்படும்.
அதேபோல், மானியமில்லா டீசல் லிட்டருக்கு 15 சென் குறைந்து 5 ரிங்கிட் 12 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தானியங்கி விலை நிர்ணய முறையான ஏபிஎம் (APM) அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தள்ளது.








