Nov 4, 2026
Thisaigal NewsYouTube

1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்டிஆர் உதவித்தொகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்டிஆர் உதவித்தொகை

தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நவம்பர் 4 ஆம் தேதி முதல் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்டிஆர் (STR) உதவித்தொகை விநியோகிக்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இதன் மூலம் பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர். அவர்களில் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையைப் பார்வையிட்டப் பின்னர் பிரதமர் இதனை அறிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →