Nov 4, 2026
Thisaigal NewsYouTube

லெம்பா பந்தாய் பி40 குடும்பங்களுக்கு தீபாவளிச் செலவுத் தொகை – ஃபாஹ்மி ஃபாட்ஸில்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லெம்பா பந்தாய் பி40 குடும்பங்களுக்கு தீபாவளிச் செலவுத் தொகை – ஃபாஹ்மி ஃபாட்ஸில்

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளிச் சந்தையைப் பார்வையிட வரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 100 பி40 குடும்பங்களுக்கு தலா 150 ரிங்கிட் செலவுத் தொகை வழங்கப்படும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் அறிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிரிக்பீல்ட்ஸ் தீபாவளிச் சந்தைக்கு வருகை தந்தபோது அவருடன் இருந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி இதனைத் தெரிவித்தார்.

இச்சந்தையில் வியாபாரம் செய்யும் 150 வணிகர்களில் 30 பேர் லெம்பா பந்தாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி, அப்பகுதியில் உள்ள பி40 குடும்பங்களுக்காக இந்தச் சிறப்பு உதவியை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இதர அமைச்சர்களுடன் இணைந்து டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி, தீபாவளி சந்தையில் கடைகளை அமைத்துள்ள இந்திய வர்த்தகர்களுடன் கலந்து உரையாடினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →