Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்

கோத்தாகினபாலு, டிச.13-


சபா, கோத்தாகினபாலு, ரானாவ், பொதுப்பணி இலாகாவின் கட்டடத்தில் சூரிய மின்சார விளக்குகளைப் பொருத்தும் பணியியில் ஈடுபட்டு இருந்த மூன்று குத்தகைத் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மாண்டனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் நிகழ்ந்தது. 25 வயது கிம்பாலி, 34 வயது சல்லே மற்றும் 54 வயது வோங் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட அந்த மூன்று குத்தகைப்பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று பணியாளர்களுடன் மின்சாரத்தைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த 20 வயது மதிக்கத்தக்க டானி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →