Oct 5, 2026
Thisaigal NewsYouTube

56 மணி நேரம் ரஹ்மா பொருட்கள் விற்பனை: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
56 மணி நேரம் ரஹ்மா பொருட்கள் விற்பனை: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

அலோர் ஸ்டார், அக்டோபர்.02-

கெடா மாநில உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மைடின், சி-மாட் மற்றும் பான் இங் யுவாட் ஆகிய பேராங்காடிகளுடன் இணைந்து மூன்று நாட்கள் 56 மணி நேரம் இடைவெளி இல்லாமல் ரஹ்மா உதவிப் பொருட்கள் விற்பனைச் செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாக அமைச்சகத்தின் கெடா மாநில தலைமை அதிகாரி முகமாட் நிஜாம் பின் ஜமலுடின் தெரிவித்தார்.

சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள அமான் ஜெயா பேராங்காடியில் மலேசியப் பொருட்கள் வாங்குவோம் 2025 எனும் சந்தையை கெடா மாநில உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்தன. இச்சந்தை செப்டம்பர் 26 ஆம் திகதி தொடங்கப்பட்டு 28 ஆம் திகதி வரை நடைபெற்றன. இதில் ஏறக்குறைய 60,000 ஆயிரம் மக்கள் வருகை தந்து உள்நாட்டு பொருட்களை மலிவான விலையில் வாங்கி மலேசியப் பொருட்களுக்கு ஆதரவு வழங்கியதாக முகமாட் நிஜாம் ஜமலுடின் குறிப்பிட்டார் .

இம்மூன்று நாட்களும் இடைவெளியில்லாமல் 56 மணி நேரம் 100 க்கும் மேற்பட்ட பல விதமான உள்நாட்டுப் பொருட்கள் குறிப்பாக வீட்டிற்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் எண்ணெய், சீனி, கோதுமை மாவு மற்றும் தனிப்பட்டப் பராமரிப்பு பொருட்கள் என விற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.

ஆகவே, கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் 56 மணி நேரம் ரஹ்மா பொருட்கள் விற்பனை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதியான ADIRATNO BIN CHE ANI சாதனை புத்தகத்தின் சான்றிதழை எடுத்து வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →