Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி உயிர்த்தப்பினர்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி உயிர்த்தப்பினர்

Share:

எம்பிவி வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, ஒன்பது மீட்டர் பாதாளத்தில் விழந்ததில் கணவன், மனைவி சொற்ப காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் உலு சிலாங்கூர், பன்டார் உத்தாமா பாத்தாங் காலி ஜாலான் மஹோகனி அருகில் நிகழ்ந்தது.

38 வயதுடைய கணவனும், மனைவியும் கைகால்களில் சொற்பக் காயங்களுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை காலை 7.36 மணியளவில் தாங்கள் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் முஹாமடுல் எஹ்ஸான் முஹமாட் சாயின் தெரிவித்தார்.


புக்கிட் செந்தோசா நிலையத்திலிருந்து தீயணைப்பு, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், பள்ளத்தில் விழுந்து கிடந்த தொயோத்தா அவான்ஸா காரிலிருந்து ஆடவர் வெளியேறிய நிலையில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அவரின் மனைவியை வீரர்கள் காப்பாற்றி, மேற்பகுதிக்கு கொண்டு வந்ததாக முஹாமடுல் எஹ்ஸான் குறிப்பிட்டார்.

Related News