கோலாலம்பூர், அக்டோபர்.27-
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக இன்று அந்நியச் செலாவணி சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீர் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு இன்று 4.2085 என்ற நிலையில் ஏறுமுகம் கண்டது.
ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 0.27 விழுக்காடு உயர்வு கண்டு, ஒரு வலுவான நிலைக்கு அடித்தளமிட்டுள்ளது என்ற Bank Muamalat Malaysia Bhd – டின் தலைமை பொருளாதார அதிகாரி Dr Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்தார்.








