ஜோகூர் பாரு, செப்டம்பர்.18-
ஜோகூரில் அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மாநிலம் முழுவதும் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்தவும் ஜோகூர் மாநிலத்திற்கு 20 ஆம்புலன்ஸ்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 46 ஆம்புலன்ஸ்களில், முதல் கட்டமாக தற்போது B வகை ஆம்புலன்ஸ்கள் 20 வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.
46 ஆம்புலன்ஸ்களில், A வகை ஆம்புலன்ஸ்கள் ஒன்பதும், B வகை ஆம்புலன்ஸ்கள் 37-ம் வழங்கப்படவுள்ளதாக லிங் தியான் சூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தற்போது வழங்கப்பட்டுள்ள 20 ஆம்புலன்ஸ்கள், நகர்புற மற்றும் கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








