கோலாலம்பூர், டிசம்பர்.09-
WCE எனப்படும் பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குகரையோர விரைவு சாலையானது, மலாக்காவை இணைக்கும் போது அந்த மாநிலம் மொத்தம் 6 டோல் புதிய டோல் சாவடிகளைக் கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
WCE விரைவுச் சாலை நான்கு மாநிலங்களை உள்ளடக்கியத் திட்டமாகும். பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.
பந்திங்கிலிருந்து 69 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலாக்காவிற்குச் செல்லும் போது, 6 புதிய டோல் சாவடிகள் திறக்கப்படும் என்று மலாக்கா மாநில பொதுப்பணி, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Hameed Mytheen Kuncu Basheer தெரிவித்தார்.








