Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஓன்லைன் முதலீட்டு மோசடியில் 9 லட்சம் வெள்ளியை இழந்தார் பெண் நிர்வாகி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஓன்லைன் முதலீட்டு மோசடியில் 9 லட்சம் வெள்ளியை இழந்தார் பெண் நிர்வாகி

ஜோகூர்பாரு, நவ. 18-


ஓன்லைன் முதலீட்டு மோசடியில் தொழிற்சாலை ஒன்றின் பெண் நிர்வாகி 9 லட்சத்து 43 ஆயிரத்து 250 வெள்ளியை இழந்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

WhatsApp புலனத்தின் வாயிலாக அறிமுகமில்லாத நபர் ஒருவர் அறிமுகப்படுத்திய முதலீட்டுத்திட்டத்தில் ஈர்க்கப்பட்ட 53 வயதுடைய அந்தப் பெண் நிர்வாகி , ஹோட்டல் துறை என்று கூறப்பட்ட முதலீட்டுத்திட்டத்தில் குறுகிய காலத்திலேயே அதிக லாபத்தை பெறும் நோக்கில் அதில் முதலீடு செய்து இருப்பது தெரியவந்துள்ளதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையில் மாறுப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அவர் பண பரிமாற்றத்தை செய்துள்ளார். மிக குறுகிய காலத்திலேயே 6 லட்சம் வெள்ளி வரையில் லாபம் கிடைத்து இருப்பதாக சந்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்ற லாபத்தொகையை பெற வேண்டுமானால், மேலும் தொகை முதலீடு செய்யப்பட வேண்டும் என்று சந்தேகப் பேர்வழி கோரியதைத் தொடர்ந்து மேலும் முதலீடு செய்ய அவர் மறுத்து விட்டார்.

எனினும் இது வரை கிடைக்கப்பெற்றதாக கூறப்பட்ட லாபத்தொகையை பெறுவதில் அவர் தோல்விக் கண்டார்.

இந்த முதலீட்டுத்திட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்து அந்த மாத, கடந்த நவம்பர் 16 ஆம் தேதி போலீசில் புகார் செய்து இருப்பதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →