ஈப்போ, ஆகஸ்ட்.27-
ஈப்போ, ஜாலான் ஹோர்லி அருகில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் இன்று அதிகாலையில் ஆடவர் ஒருவர் கடும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காலை 6 மணியளவில் அவ்வழியே கடந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர், அந்த நபரின் அசைவற்ற உடலைக் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
முதற்கட்ட பரிசோதனையில் அந்த நபரின் தலை மற்றும் உடலின் பின்புறத்தில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் எந்தவோர் அடையாள ஆவணமும் காணப்படவில்லை என்று ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.
அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவை அடிப்படையாகக் கொண்டுச் சோதனையிட்டதில் அதிகாலை 4.24 மணியளவில், உயிரிழந்த நபரை ஒரு வெள்ளை நிற லாரி துரத்திக் கொண்டு வந்து அவரை மோதித் தள்ளியது. அவர் கீழே விழுந்த பின்னர் அவர் லோரி சக்கரங்களால் அரைப்பட்டுள்ளார் என்று ஏஐபி அபாங் ஸைனால் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ள லோரியின் உரிமையாளரையும், லோரி ஓட்டுநரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.








