Dec 3, 2025
Thisaigal NewsYouTube
துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த அமெரிக்கப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த அமெரிக்கப் பிரஜை கைது

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 3 அடுக்கு துப்பாக்கித் தோட்டாக்கள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓர் அமெரிக்கப் பிரஜையை போலீசார் கைது செய்தனர். அந்த ஆடவர் நேற்று வெள்ளிக்கிழமை KLIA 1 இல் பிடிபட்டதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுஸ்செயின் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.

இராணுவ சலுகையைப் பயன்படுத்தி, நாட்டிற்குள் சுற்றுலாப் பயணியாக நுழைந்த அந்த அமெரிக்கப்பிரஜை, 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் குறிப்பிட்டார். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் மேலும் விவரித்தார்.

Related News