Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை:  இரு பெண்கள் உட்பட மூவர் கைது

சிப்பாங், ஜூன்,27-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் இரு பெண்கள் உட்பட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 வயது மாணவி படுகொலை தொடர்பில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் ஜோகூர் பாருவிலும் , நெகிரி செம்பிலான் கெமென்சேவிலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. மாணவி படுகொலை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் 48 மணி நேரத்திற்குள் மூவரும் பிடிபட்டதாக ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

இந்த மூவரும் மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் முக்கியச் சந்தேகப் பேர்வழிகள் என்று நம்பப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →