கடந்த ஆண்டு லைசன்ஸ் இல்லாமல் 24 ஆயிரம் லிட்டர் டீசலை வைத்திருந்ததாக செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட லாரி ஒட்டுநர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
அக்குற்றத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, பினாங்கு, ஜாலான் பினாங் எமாஸ் 1, கவாசான் பெருசாஹான் பினாங் எமாஸ்ஸில் மதியம் 1.13 மணி அளவில் அக்குற்றத்தைப் புரிந்ததாக 46 வயது ஜி சந்திரகுமார் நீதிபதி அஸ்மான் அபு ஹாஸ்ஸான் முன்னிலையில் வாசிக்கப்பட்டக் குற்றச் சாட்டை மறுத்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட மூலப் பொருளை லைசன்ஸ் இல்லாமல் கையாண்ட குற்றத்திற்காக கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்கள் சட்டம் 1961 இன் கீழ் ஒரு மில்லியன் வெள்ளி வரையில் அபராதமும் 3 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 50 ஆயிரம் வெள்ளிக்கு ஜாமினில் விடுவிக்க உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை பப்ளிக் பிராசியூட்டர் ரொஸ்லினா அட்ரிஸ் பரிந்துரைத்த நிலையில், அந்தத் தொகையை 20 ஆயிரம் வெள்ளியாகக் குறைத்திட ஜி சந்திரகுமார் இன் வழக்கறிஞராக ஆஜரான தி ஷர்மிலா கோரினார்.
அதன் படி 20 ஆயிரம் வெள்ளி ஜாமினில் சந்திரகுமார் விடுவிக்கப்படவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தமது வரவை உறுதி செய்யவும் நீதிபதி அஸ்மான் தீர்ப்பளித்தார்.
எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி இவ்வழக்கின் ஆவணங்கள் தக்கல் செய்யப்படவும் முடிவு செய்யப்பட்டது.








