குவாந்தான், ஜூன்.07-
குவாந்தானில் உள்ள அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் பகுதியில், நேற்று காலை மயங்கிய நிலையில் காணப்பட்ட ஆடவர், பின்னர் உயிரிழந்ததாக பகாங் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி அல்ல என்றும், மருத்துவமனை ஊழியரும் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தின் போது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்த நபரை பரிசோதித்ததாகவும், பரிசோதனையின் பின்னர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து குவாந்தான் மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








