சுங்கை பட்டாணி, ஜூன்.07-
சுங்கை பட்டாணியில் புதிதாக வாங்கிய காரில் இன்று, தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியான அஹ்மாட் ஷாஃபிக் பின் அஹ்மாட் ஷுக்ரி, எதிரே வந்த மணல் லோரியுடன் மோதி விபத்திற்குள்ளானதில், அந்த அதிகாரி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று பிற்பகல் 3.46 மணியளவில் பினாங் துங்கால் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்விபத்தில் அந்த அதிகாரி, அவரது மனைவி, மனைவியின் உறவினர்கள் மூவர் மற்றும் 6 மாத பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அந்த அதிகாரியின் மூன்று வயது மகள் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதற்கிடையில், லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதுடன், போலீசாரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அலட்சியமான மற்றும் ஆபத்தான வாகன ஓட்டுதலால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இச்சம்பவமானது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








