Jun 7, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஹோட்டல் நுழைவு வாயிலில் கார் பாய்ந்து விபத்து
தற்போதைய செய்திகள்

பினாங்கில் ஹோட்டல் நுழைவு வாயிலில் கார் பாய்ந்து விபத்து

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.07-

பினாங்கு மாநிலம் கெர்னி டிரைவ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நுழைவு வாயிலில், இன்று காலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

61 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் காரை நிறுத்துவதற்காக பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதே இந்த சம்பவத்திற்குக் காரணம் என திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், நேராக ஹோட்டலின் வாயில் பகுதியில் மோதி உள்ளே புகுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News