Jun 7, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வானில் மர்மமான பிரகாச ஒளி: மலேசிய விண்வெளி ஆய்வு முகமை தீவிர கண்காணிப்பு
தற்போதைய செய்திகள்

சபாவில் வானில் மர்மமான பிரகாச ஒளி: மலேசிய விண்வெளி ஆய்வு முகமை தீவிர கண்காணிப்பு

Share:

புத்ராஜெயா, ஜூன்.07-

சபா மாநிலத்தில், கடந்த வியாழக்கிழமை இரவு வானில் காணப்பட்ட மர்மமான பிரகாச ஒளி தொடர்பான புகார்கள் கிடைத்துள்ளதை மலேசிய விண்வெளி ஆய்வு முகமையான BPAngkasa உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் தொடர்பாக அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து BPAngkasa தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், விண்வெளியில் இருந்து ராக்கெட் சிதைவுகள் மலேசியப் பகுதியில் விழுந்ததாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி தொடர்பான ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் அல்லது ராக்கெட் சிதைவுகள் கண்டறியப்பட்டால், அது குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் காணப்பட்டால் அதனைத் தொட வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

Related News