Jun 7, 2026
Thisaigal NewsYouTube
புலாவ் தியோமன் தீவில் மாயமான அமெரிக்க சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

புலாவ் தியோமன் தீவில் மாயமான அமெரிக்க சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டார்

Share:

குவாந்தான், ஜூன்.07-

பகாங்கிலுள்ள பூலாவ் தியோமான் தீவில் நடைபயணத்தின் போது வழி தவறி மாயமான அமெரிக்க சுற்றுலாப் பயணி, தனது கைப்பேசி மூலம் நேரடி இருப்பிடத் தகவலை மீட்புக் குழுவினருடன் பகிர்ந்ததன் மூலம் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பழைய Kampung Tekek-Kampung Juara நடைபாதையில் பயணம் மேற்கொண்டிருந்த அந்த நபர், இரவு 8.30 மணியாகியும் விடுதிக்குத் திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் Sharif Shai Sharif Mondoi தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது நேரடி இருப்பிடத் தகவலை அறிந்த அதிகாரிகள், அவரை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவமானது, மலை மற்றும் வனப் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் போது வழிகாட்டி, GPS மற்றும் தொடர்பு வசதிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News