Jun 7, 2026
Thisaigal NewsYouTube
செரண்டா அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

செரண்டா அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.07-

சிலாங்கூர் மாநிலம், செரண்டா சுகாதார நிலையத்திற்குப் பின்னால் உள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மதியம் 12:06 மணியளவில் அவசர உதவிக்கான அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 6-வது மண்டலத் தலைவர் முஸ்தாகிம் ரிமோன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பாத்தாங் காலி தீயணைப்பு படையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று அந்நபரை மீட்டதாகவும், என்றாலும், அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News