கூலிம், ஜூன்.07-
இன்று காலை சுமார் 11.55 மணி அளவில் AT & S தொழிற்சாலையின் சமிஞ்சை விளக்கில் நிற்காமல் சென்ற சுற்றுலா பேருந்தை சுங்கை பட்டாணி போக்குவரத்து இலாகாவின் அதிகாரிகள் சோதனைக்காக தடுத்து நிறுத்தியதாக கெடா மாநில போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் STEIN VAN LUTAM தெரிவித்தார்.
அப்பேருந்தைச் சோதனைச் செய்தததில், அப்பேருந்து ஓட்டுநரிடம் சுற்றுலா பேருந்தைச் செலுத்துவத்தற்கான Competent Driving Licence (CDL) மற்றும் Public Service Vehicle Licence ஆகிய உரிமங்கள் இல்லாததை அதிகாரிகள் உறுதிச் செய்தனர். அத்துடன் அந்த ஓட்டுநர் அதிகாரிகளிடம் இன்னும் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக STEIN VAN LUTAM கூறினார்.
ஆகவே, மேல் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட சுற்றுலா பேருந்து கூலிம் போக்குவரத்து இலாகாவின் டேப்போவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக STEIN VAN LUTAM குறிப்பிட்டார்.
சுற்றுலா பேருந்துகளுக்கான உரிமங்கள் மற்றும் அப்பேருந்தை ஓட்டும் ஓட்டுநர்களுக்கான உரிமங்கள் கட்டாயம் இருப்பதை உரிமையாளர் உறுதிச் செய்ய வேண்டும். எவ்விதமான உரிமங்கள் இல்லாமல் சுற்றுலா பேருந்துகளில் சுற்றுப் பயணிகளை ஏற்றுவதோ அல்லது சுற்றுலாவிற்காக பயன்படுத்துவதை போக்குவரத்து இலாகா கண்டுபிடித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கெடா மாநில போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் STEIN VAN LUTAM.








