Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவன் போதைப்பொருளுடன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவன் போதைப்பொருளுடன் பிடிபட்டான்

Share:

17 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் ஒருவன், 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளுடன் பிடிபட்டதாக கிளந்தான், பாசீர் புத்தே மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஸுல் ரிஸால் ஸகாரியா தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கம்போங் லெம்பா செமேராக்கில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த ஐந்தாம் படிவ மாணவனிடம் 74.80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டதாக ஸைஸுல் குறிப்பிட்டார்.
போலீசாரைக் கண்டதும் Yamaha Y15ZR ரக மோட்டார் சைக்கிளில் அந்த மாணவன் தப்பிக்க முற்பட்ட போது, போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் குழு அந்த மாணவனை வளைத்துப் பிடித்ததாக அவர் தெரிவித்தார்.

Related News