Aug 19, 2026
Thisaigal NewsYouTube
தாயின் கண்ணீரை வெற்றியாக்கிய ஐந்து பிள்ளைகள்
தற்போதைய செய்திகள்

தாயின் கண்ணீரை வெற்றியாக்கிய ஐந்து பிள்ளைகள்

Share:

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், 12 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவுத் தொழிலாளியாக உழைத்து, தனது ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தெடுத்த எம். கவிதாவின் தியாகக் கதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இதயத்தையே நெகிழ வைத்துள்ளது.

கவிதாவின் வியர்வைக்கும் தியாகத்திற்கும் கிடைத்த பலன் என்ன தெரியுமா? ஐந்து பிள்ளைகளும் இன்று தத்தமது துறைகளில் வெற்றிகரமாக உயர்ந்துள்ளனர்.

50-ஆவது பிறந்தநாளன்று பணியில் இருந்த தாயை ஆச்சரியப்படுத்த வந்த பிள்ளைகள், தங்களது தொழில் சீருடைகளில் வந்தனர். அவர்களில் ஒருவர் விமானி, மற்றொருவர் தாதியர்.

தாய் சிந்திய கண்ணீர் துயரத்தின் கண்ணீரல்ல... தனது பிள்ளைகளை உயரத்தில் பார்த்த ஆனந்தக் கண்ணீர்!

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 துப்புரவுத் தொழிலாளர் தின பாராட்டு விழாவில் கவிதாவின் உழைப்பையும் தியாகத்தையும் பாராட்டி, சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

Related News