Sep 15, 2026
Thisaigal NewsYouTube
110 கோடி ரிங்கிட் அரசு ஒப்பந்தம் குறித்து எஸ்.பி.ஆர்.எம் விசாரணை
தற்போதைய செய்திகள்

110 கோடி ரிங்கிட் அரசு ஒப்பந்தம் குறித்து எஸ்.பி.ஆர்.எம் விசாரணை

Share:

சுமார் 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தம் தொடர்பாக பொருளாதார அமைச்சின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாகவும், அரசாங்கத்திற்கு பாதகமான நிபந்தனைகளுடனும் இறுதி செய்யப்பட்டதாக அரசு சாரா அமைப்புகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் முதலீடு, வர்த்தகம், தொழில் அமைச்சின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த ஒப்பந்தம் செய்து முடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சில் இருந்து விலகிய சிலர் பின்னர் அந்த நிறுவனத்தின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதும் நலன் முரண்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெற எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்