கிள்ளான், ஜூலை.23-
பேருந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயமாக இருக்கைப் பாதுகாப்புப் பட்டை அணிய வேண்டும் என்ற புதிய விதிமுறை கடந்த ஜுலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளன.
பயணிகள் இருக்கைப் பட்டை அணிந்து இருப்பதை உறுதிச் செய்வதற்கு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, அமலாக்க அதிகாரிகள் அவ்வபோது பேருந்துகளில் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்துகளில் கடந்த 22 நாட்களில் இருக்கைப் பட்டையை அணியாதவர்களுக்கு எதிராக 1,194 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
1,108 சம்மன்கள், பயணிகளுக்கும், 62 சம்மன்கள் பேருந்து ஓட்டுநர்களுக்கும், 24 சம்மன்கள் இருக்கைப் பட்டை தொடர்பிலும் வழங்கப்பட்டதாகும் என்று அவர் விளக்கினார்.








