Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் பலாத்காரம்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் பலாத்காரம்

Share:

மலாக்கா, மே.30-

மலாக்காவில் கடந்த வாரம் 19 வயது பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இரண்டு உணவு விநியோகிப்பு வியாபாரிகள், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

23 வயது முகமட் ஷாஃபிக் ஜசாருடின் மற்றும் 29 வயது முகமட் நஸிம் ரஸாலி என்ற அந்த இரு நபர்கள் கடந்த மே 22 ஆம் தேதி இரவு 10 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள தாமான் புக்கிட் ரம்பாய் உத்தாமா என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கும்பலாகச் சேர்ந்து அந்த மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News