Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு, 1.87 மில்லியன் ரிங்கிட் வசூல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு, 1.87 மில்லியன் ரிங்கிட் வசூல்

கோலாலம்பூர், நவ.8-

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு நாட்களில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் வழங்கிய போக்குவரத்து சம்மமன்களுக்கான 50 விழுக்காடு அபராத கட்டண கழிவுத்தொகை மூலம் 1.87 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப்பிரிவு இயக்குநர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

இந்த சலுகை வாயிலாக 17 ஆயிரத்து இரண்டு சம்மன்களுக்கு அபராதம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 850 ரிங்கிட் ரொக்கப்பணமாகவும், 8 லட்சத்து 82 ஆயிரத்து 340 ரிங்கிட் மின்னியல் கட்டண முறை வாயிலாகவும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 430 ரிங்கிட் 50 விழுக்காடு கூப்பன் மூலமாகவும் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →