Jul 1, 2026
Thisaigal NewsYouTube
வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

Share:

வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருளாதார மீள்திறன் தொகுப்பு அமல்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கான முன்னேற்ற விரைவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் உரையாற்றிய அன்வார்,தற்போது தொழிலாளர் சந்தை வலுவாக இருந்தாலும் கூட, நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறி வரும் சூழலில், தொழிலாளர்கள் போட்டித்திறனுடன் இருக்க வேண்டும் என்றும், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டால், தற்போதைய தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திறன்களில் மீள் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொருளாதார நிலைத்தன்மை திட்டம், மனித வள மேம்பாடு மற்றும் தொழிலாளர் சந்தை நிலைத்தன்மைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை