Oct 16, 2026
Thisaigal NewsYouTube

SPM தேர்வு தொடரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
SPM தேர்வு தொடரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

டிச. 8-

அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள அனைத்து தரப்பினரும் எடுத்துக் கொண்டிருக்கும் தயார் நிலையை கருத்தில் கொண்டு SPM தேர்வு தொடரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர், Fadhlina Sidek தெரிவித்தார்.

SPM தேர்வெழுதுபவர்கள் பாதுகாப்பாகத் தேர்வு எழுதும் வகையில் மாணவர்களின் நலன்களை கவனித்துக்கொள்வதையும் இதில் உள்ளடக்கியிருப்பதாக Fadhlina Sidek கூறினார்.

பள்ளிகள், தேர்வுகள், வெள்ளம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் கையாள Op Payung நடவடிக்கையை தொடர்ந்து கல்வி அமைச்சு செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள SPM தேர்வெழுதுபவர்கள் நாளை முதல் டிசம்பர் 12 வரை அறிவியல் தேர்வை எழுதுவார்கள். அடுத்த ஆண்டு ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் 5 முதல் 7 கனமழை அலைகள் வரும் என்று மெட் மலேசியா கணித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →