ஈப்போ, ஜனவரி.03-
தைப்பிங் அருகில் கமுந்திங்கில் பூட்டப்பட்டு இருந்த வீடொன்றில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இன்று பிற்பகல் 1.05 மணியளவில் போலீஸ் துறையிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தாமான் அஸிஸுல் ரஹ்மான் வீடமைப்புப் பகுதிக்கு வீரர்கள் விரைந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை துணை இயக்குநர் Shaziean Mohd Hanafiah தெரிவித்தார்.
வீட்டில் அறையில் 64 வயது மூதாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். விசாரணைக்கு ஏதுவாக அவரின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








