பெட்டாலிங் ஜெயா, ஜூலை.27-
குடும்பச் செலவுகள் விண்ணை முட்டும் வேளையில், உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு கேபிடிஎன் மக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது! இனி, சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா – சாரா உதவித் தொகையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்களில் மட்டுமல்லாமல், நடமாடும் ரஹ்மா மடானி விற்பனையிலும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புறநகர் மக்களுக்கு இது பெரும் உதவியாக அமையும் எனக் கூறும் அவர், கூடுதலாக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 20 ஆயிரம் விற்பனைத் தொடர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.








